கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-31 18:45 GMT

பொள்ளாச்சி

கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்

பொள்ளாச்சி அருகே வஞ்சியாபுரம் பிரிவில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக நகர கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று, சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் நல்லட்டிபாளையத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 19) என்பதும், கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரை சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கேட்டபோது கரூரில் இருந்து வாங்கி வந்து பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா பறிமுதல்

இதேபோன்று ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் நகர கிழக்கு போலீசார் ரோந்து சென்றபோது அங்கு நின்ற ஒரு மூதாட்டியை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செஞ்சேரிகுமாரபாளையத்தை சேர்ந்த சந்தானலட்சுமி (59) என்பதும், வெளியூரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பதுக்கி வைத்து பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்