வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

திண்டுக்கல், பழனியில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

Update: 2022-06-18 14:34 GMT

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் சந்துரு நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 30). கார் டிரைவர். இவரது மனைவி திலகவதி (26). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சூர்யா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சூர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடலூர் மாவட்டம் வடக்குமால்குடி பகுதியை சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் மணியரசன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவர், பழனியை அடுத்த தாழையூத்து பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்