2 பேர் சிறையில் அடைப்பு

மதுவிற்றதால் கைது செய்யப்பட்ட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-06-18 20:49 GMT

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் சுற்றுப்பகுதியில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மற்றும் போலீஸ் ஏட்டு சரவணக்குமார் தலைமையில் போலீசார் காளீஸ்வரன், கார்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் திருவிசநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மணஞ்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஐயர் என்கிற சக்திவேல், அதே பகுதி புதுதெருவை சேர்ந்த ராஜ்மோகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 435 புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சக்திவேல், ராஜ்மோகன் ஆகிய 2 பேரையும் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்