இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-09-17 11:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த பாலவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மகன் தனசேகர் (18). இவர் பொன்னேரி கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு சேர்க்கைக்காக மோட்டார் சைக்கிளில் ஏலியம்பேடு குன்னமஞ்சேரி சாலையில் தந்தை பாஸ்கருடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பொன்னேரி நோக்கி சென்ற டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மீஞ்சூர் அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அரிபாபு (42). இவர் கோளூர் கிராமத்தில் உள்ள மதுக்கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்காக மோட்டார் சைக்கிளில் பெரியமனோபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அரிபாபு மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்