மேலூர் பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
மேலூர் பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
மேலூர்
மேலூர் பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
ஒப்பந்தகாரர் பலி
கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் உடையப்பராஜா (வயது 35). கொட்டாம்பட்டி பகுதியில் காவிரி குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தகாரராக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு உடையப்பராஜா மோட்டார் சைக்கிளில் மதுரை-திருச்சி நான்கு வழி சாலையில் வலைச்சேரிபட்டி பிரிவு அருகே சென்றார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடையப்பராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கொட்டாம்பட்டி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் சாவு
மேலூர் அருகே கீழையூரை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அழகுசுந்தரம் (22). இவர் மோட்டார் சைக்கிளில் கீழவளவுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அவர் ரெங்கசாமிபுரம் அருகே வந்தபோது மேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற கார் ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.