வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-10-05 20:10 GMT

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

பர்னிச்சர் கடை ஊழியர்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து (வயது 48). இவர் சீவலப்பேரி பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் பணத்தை வசூல் செய்வதற்காக செல்வது வழக்கம். நேற்று கடைக்கு வந்த அவர் பின்னர் பணம் வசூலிக்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

நெல்லை பாளையங்கோட்டை கீழநத்தம் விலக்கு பகுதியில் 4 வழிச்சாலையில் சென்றபோது, எதிரே நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி ஒரு கார் வந்தது.

பலி

அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் கார்-மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அந்தோணி சவரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கார் மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கம்பி மீது மோதி நின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான அந்தோணி சவரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்றொரு சம்பவம்

மேற்குவங்காளத்தை சேர்ந்த சாய்புதின் மகன் சாஜித் அலி (29). இவர் நெல்லை இட்டேரியில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந் தேதி அவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாைளயங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாஜித் அலி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்