வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

காரியாபட்டி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.

Update: 2023-08-19 19:06 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.

வாலிபர் சாவு

புளியம்பட்டி மகாராஜபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (வயது 34). இவர் மோட்டார் சைக்கிளில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியாபட்டியை அடுத்த கல்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த லாரி திடீரென கிருஷ்ண பிரசாத் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

நரிக்குடி அருகே டி.கடமங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). இவர் விறகு வெட்டும் வேலை செய்து வந்தார்.. இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நரிக்குடி வந்து தனது உறவினருக்கு பணம் அனுப்பி விட்டு பிறகு திரும்பவும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மணிக்கட்டியந்தல் அருகே சென்ற போது எதிரே வந்த ஷேர் ஆட்டோ மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே முத்துப்பாண்டியை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிக்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்