தா.பேட்டையை அடுத்த தேவரப்பம்பட்டி, மேலகொட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் கார்த்திக் (வயது 29). இவர் கண்ணனூரில் டி.வி மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் பெற்றோர் அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயில் கருகி பெண் பலி
திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் இந்திராணி (75). இவர் கடந்த 2-ந்் தேதி காலை வீட்டில் சாமி கும்பிடும் போது, சூடம் ஏற்றினார். அப்போது, அவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.