நத்தம் அவுட்டர் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நத்தம் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது, செந்துறை பிரிவு சாலையில் கஞ்சா விற்று கொண்டிருந்த கு.புதூரை சேர்ந்த மதியரசன் (வயது 21), பன்னியாமலையை சேர்ந்த பாக்கியம் (51) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.