கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
நாங்குநேரி பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்.
நாங்குநேரி:
நாங்குநேரி பகுதியில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக நாங்குநேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சியைச் சேர்ந்த சிவா (வயது 23), முருகன் (23) ஆகியோர் தூத்துக்குடியில் இருந்து நாங்குநேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.