2 பேர், குண்டர் சட்டத்தில் கைது

சீர்காழி பகுதியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-24 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி பகுதியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

குற்ற செயல்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் தினேஷ் (வயது 24). சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம்சிவன் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் பூரண சந்திரன் (25). இவர்கள் சீர்காழி பகுதியில் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர்.சீர்காழி பகுதியில் இவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டத்தில கைது

அதன்பேரில் தினேஷ், பூரணசந்திரன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் நாகையில் சிறையில் இருந்த தினேஷ், பூரணசந்திரன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்