கஞ்சா செடி பயிரிட்ட பெண் உள்பட 2 பேர் கைது

ஒடுகத்தூர் மலைப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்த பெண்உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-05 18:03 GMT

ஒடுகத்தூர் மலைப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்த பெண்உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா செடி வளர்ப்பு

வேலூர் மாவட்டத்தில் கஞ்சாவை ஒழிக்கும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேப்பங்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பீஞ்சமந்தையை அடுத்த தேந்தூர் மலை கிராமத்தில் வாழைப் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன்,சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அந்தப்பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது தேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் முத்துக்குமார் (வயது 22) என்பவர் தனது நிலத்தில் 25 கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண் உள்பட 2 பேர் கைது

அதே போன்று ரவி என்பவரது மனைவி கமலா (50) என்பவரது நிலத்தில் 50 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்து, முத்துக்குமார், கமலா ஆகிய இருவரையும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ரவி (55) என்பவர் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரவியின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டதும் ரவி தப்பி ஓடி விட்டார். அவரது வீட்டில் சோதனை செய்ததில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்