பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கைது

பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-16 18:45 GMT

பாவூர்சத்திரம்:

சுரண்டை அருகே உள்ள துவரங்காடு, பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவிநாயகர்புரம் வடக்கு பாண்டியனார்சாலை, மற்றும் தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பைக்கில் சென்ற பெணகளிடம் மர்ம நபர்கள் நகைகளை பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் ஆகியோரின் உத்தரவின்படி, சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி, பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, கிருஷ்ணன், ஜோதிவேல் முருகன் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேஷகிரி ஆகியோரின் தலைமையிலான தனிப்படையினர் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கீழப்பாவூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த கணேசன் மகன் முப்புடாதிமுத்து (வயது 28), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் ஈஸ்வரன் (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்