குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா கீழுர் தும்பக்காடு கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி மேனகா (வயது 30). இவர், சாராய விற்பனையில் ஈடுபட்ட போது போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதேபோல் ஜமுனாமரத்தூர் தாலுகா கின்காத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பிரான் (37) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவதை தடுக்க மேனகா, தம்பிரான் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.