பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-25 08:12 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், நேற்றுகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அண்ணாமலை (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல நேற்று மாலையில் போலீசார் வாகன சோதனை செய்த போது, ஆந்திர மாநில பஸ்சில் சென்னைக்கு கஞ்சா கடத்த முயன்ற ஒடிசாவை சேர்ந்த இட்டிஷ் (29) என்பரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்