போலி நகையை அடகு வைக்க முயன்ற 2 பேர் கைது
போலி நகையை அடகு வைக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார்நிதி நிறுவனத்தில் வத்திராயிருப்பு சேதுராஜபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 24), ரோசல்பட்டியை சேர்ந்த தன பிரபாகரன் (26) ஆகிய 2 பேரும் 6½ பவுன் தங்க நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் கடன் கேட்டனர்.
அந்த நகையை பரிசோதித்து பார்த்த போது அது போலிநகை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நிதிநிறுவன உதவி மேலாளர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் 2 பேரையும் விருதுநகர் மேற்கு போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.