வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-15 21:20 GMT

சிவகாசி, 

திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் அந்தோணிராஜ் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவள்ளுவர் காலனியை சேர்ந்த பெரியசாமி என்கிற உதயகுமார் (24), பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்த ஆனந்தராஜா (21) ஆகியோர் அந்தோணிராஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஆட்கள் வந்ததால் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தோணிராஜ் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமார், ஆனந்தராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்