சேலத்தில் வெவ்வேறு சம்பவத்தில்பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

Update: 2023-07-15 18:36 GMT

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பம்பரக்கார வட்டம் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 26). பிரபல ரவுடியான இவர், சங்கர் நகரை சேர்ந்த தனபால் என்பவரை பெரியபுதூர் பகுதியில் வழிமறித்து மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர். இதேபோல் சேலம் அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்ற போது 2 பேர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், திருநாவுக்கரசை மிரட்டியது நாட்டாண்மங்கலம் ஜி.கே.கரட்டூரை சேர்ந்த ரமேஷ் (35) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய கூட்டாளி ரகுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்