பேரையூர் அருகே 500 ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது
பேரையூர் அருகே 500 ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்
பேரையூர் அருகே 500 ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
500 ரூபாய் கள்ளநோட்டு
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 38). இவரிடம் அதே ஊரை சேர்ந்த சரத்குமார் (29), மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த மருதுபாண்டி (29) ஆகிய 2 பேரும், தாங்கள் வைத்திருந்த சில 500 ரூபாய் நோட்டுகளில் இருந்து 500 ரூபாய் ஒன்றை கொடுத்து மதுபாட்டில் வாங்கி வர சொல்லி உள்ளனர். விக்னேஸ்வரன் அவர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டை பார்த்தபோது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. உடனே விக்னேஸ்வரன், அங்கிருந்தவர்கள் உதவியுடன் 2 பேரையும் பிடித்து சாப்டூர் போலீசில் ஒப்படைத்தார்.
2 பேர் கைது
இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சரத்குமார் மற்றும் மருதுபாண்டி ஆகியோரை கைது செய்தனர். அவர்களுக்கு கள்ளநோட்டு எப்படி கிடைத்தது? இது போல் வேறு எங்காவது கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டு இருக்கிறார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
பேரையூர் பகுதியில் 500 ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.