பொள்ளாச்சியில் மடிக்கணினிகள், செல்போன் திருடிய 2 பேர் கைது

பொள்ளாச்சியில் மடிக்கணினிகள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடிய 2 பேரை போலீசர் கைது செய்தனர்.

Update: 2022-11-17 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மடிக்கணினிகள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடிய 2 பேரை போலீசர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருட்டு

தேனி மாவட்டம் தீபாலகோட்டையை சேர்ந்தவர் ராஜசேகர் என்பவரது மகன் ராகுல் (வயது 20). இவர் உடுமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இ.சி.இ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் கந்தசாமிபுரத்தில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி, தினமும் கல்லூரிக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் கல்லூரிக்கு சென்று விட்டு அறைக்கு திரும்பி வந்தனர். அப்போது அறை திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு இருந்த மடிக்கணினிகள், செல்போன், சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

2 பேர் கைது

மேலும் தனிப்டை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை ரோடு சி.டி.சி. மேட்டில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் திருவாரூரை சேர்ந்த தொழிலாளி பார்த்தீபன் (26), டிரைவர் முகமது தவுபிக் (20) என்பதும், அவர்கள் கல்லூரி மாணவர்கள் அறையில் இருந்த பொருட்கள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், செல்போன் சார்ஜர், செல்போன், பவர்பேங்க் உள்பட ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்