மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது
காந்திபுரத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கணபதி
கோவை காந்திபுரம் முதல் வீதி விரிவு பகுதியை சேர்ந்தவர் கனக ராஜ். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது61). இவர் கணேசன் வீதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று கலைச்செல்வியின்கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்கநகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து, கலைச்செல்வியிடம் நகை பறித்தது தொடர்பாக கோவை செட்டிபாளையம் பாரதிநகரை சேர்ந்த சபீர் அலி என்பவரின் மகன் இசாத் அலி (19) மற்றும் 12 வயது சிறுவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதில் சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான்.