ஆடு திருடிய 2 பேர் கைது

பாளையங்கோட்டையில் ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-19 19:18 GMT

பாளையங்கோட்டை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் சுடலைக்கண்ணு (வயது 38). இவர் தச்சநல்லூர் உலகம்மன் கோவில் தெருவில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான 3 ஆடுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நெல்லை அருகே சிவந்திபட்டி கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் (32), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்து (21) ஆகிய 2 பேரும் சேர்ந்து, சுடலைக்கண்ணுவின் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்