தொழிலாளி வீட்டில் திருடிய 2 பேர் கைது

திண்டிவனம் அருகே தொழிலாளி வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-07 18:45 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே ஓங்கூர் பஸ் நிறுத்தம் அருகே ஒலக்கூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே தேவநாதபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் சாரதி (வயது 23), நெமிலி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (20) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் இவர்கள் கோனேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான பாபு என்பவருடைய வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3½ பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்