மீன்களை திருடிய 2 பேர் கைது

சீர்காழி அருகே மீன்களை திருடிய 2 பேர் கைது

Update: 2023-07-03 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி உப்பனாற்று கரையில் தமிழக அரசு மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நவீன மீன் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த விற்பனை நிலையத்திற்கு அருகே உள்ள மீன் தொட்டியில் விற்றது போக மீதம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இறால் மற்றும் கெண்டை மீன்கள் கடந்த 27-ந் தேதி மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து விற்பனை நிலைய உரிமையாளர் சிவக்குமார் (வயது47) சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இதில் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செவத்தையன் மகன் செல்வகுமார் (31), ஈசானிய தெருவை சேர்ந்த விஜயகுமார் (56) ஆகிய 2 பேரும் மீன்களை திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்