கோழிகளை திருடிய 2 பேர் கைது

கோழிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-12 18:47 GMT

புகழூர் காகித ஆலை- புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு கார்த்தியின் தந்தை சுப்பிரமணி தோட்டத்தில் கட்டில் போட்டு உறங்கி கொண்டிருந்தார். கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை மர்மநபர்கள் 2 பேர் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோழிகளை திருடியது வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்த சூர்யா (19), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (18) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிமிருந்த கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்