செல்போன் திருடிய 2 பேர் கைது
செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவரும் சங்கரன்கோவிலை சேர்ந்த மதன்குமார் என்பவரும் நேற்று முன்தினம் அரவிந்த் கண் ஆஸ்பத்திரி அருகே உள்ள புதிய தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழ் குளித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் குமாரின் செல்போன் மற்றும் மதன்குமாரின் கைப்பை ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றனராம். இதனை பார்த்த அவர்கள் 2 பேரையும் பிடித்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் அம்பையை சேர்ந்த சுரேஷ் (36), நெல்லை சந்திப்பு தைக்கா தெருவை சேர்ந்த ஹமீது (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.