செல்போன் கோபுரத்தில் ஒயர் திருடிய 2 பேர் கைது

நெல்லை சந்திப்பில் செல்போன் கோபுரத்தில் ஒயர் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-22 22:08 GMT

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மநபர் ஒருவர் சுமார் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 30 மீட்டர் காப்பர் ஒயரை வெட்டி எடுத்து திருடிச் சென்றார். இதுகுறித்து பி.எஸ்.என்.எல். துணை கோட்ட பொறியாளர் கலைசெல்வன் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவை வால்பாறையை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 25) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டதும், அந்த ஒயரை நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த இரும்பு கடைக்காரர் சங்கர் (45) என்பவர் வாங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்