வாலிபரிடம் செல்போன்களை பறித்த 2 பேர் கைது

வாலிபரிடம் செல்போன்களை பறித்த 2 பேர் கைது

Update: 2022-12-18 18:45 GMT

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). இவர் நேற்று அதிகாலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை தடுத்து நிறுத்தி ராம்குமாரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ராம்குமார் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் திருவனந்தபுரம் குளத்தூரை சேர்ந்த தினேஷ் (38) மற்றும் சிஜி (38) ஆகியோர் செல்போன்களை பறித்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து தினேஷ், சிஜி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்