தனியார் பஸ்சில் மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது

புதுச்சேரியில் இருந்து மயிலத்துக்கு தனியார் பஸ்சில் மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது

Update: 2023-02-12 18:45 GMT

மயிலம்

புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மயிலம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய 2 மர்ம நபர்கள் கையில் பையுடன் அங்கிருந்து வேகமாக நடந்து சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த மயிலம் போலீசார் அந்த மர்மநபர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் செஞ்சியை அடுத்த கொரவனந்தல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தேசிங்கு மகன் ராஜ்(வயது 23), அதே பகுதியை சோ்ந்த சம்பத்(54) என்பதும், புதுச்சேரியில் இருந்து தனியார் பஸ்சில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 20 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்