12 கிலோ சந்தனக்கட்டை கடத்திய 2 பேர் கைது

Update: 2023-08-16 19:08 GMT

ஏற்காடு

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு சந்தனக்கட்டை கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏற்காடு வனச்சரகர் முருகன், வனவர்கள் சக்திவேல், ரவி மற்றும் வனத்துறை குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்காடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் ஒருவர் நின்றார். இதையடுத்து வனத்துறையினர் பையை சோதனை செய்தனர். அதில் சுமார் 12 கிலோ எடையுள்ள சந்தனக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் விசாரித்ததில் அவர் ஏற்காடு வாழவந்தியை சேர்ந்த ரங்கராஜ் (வயது 59) என்பது தெரியவந்தது. மேலும் ஏற்காடு குண்டூர் பகுதியை சேர்ந்த வெள்ளையன் (42), மாரமங்கலம் பகுதியை சேர்ந்த வடமன் மகன் வெங்கடேசன் ஆகியோர் சந்தன மரத்தை வெட்டி சிராய்புகளாய் தயார் செய்தது கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் ரங்கராஜ், வெள்ளையன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவருக்கும் சந்தன மரம் வெட்டி கடத்தியதற்காக மொத்தம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

ஏற்காட்டில் நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தனக்கட்டை வெட்டிய கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்