லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-24 20:14 GMT

தா.பேட்டை:

தா.பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தா.பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தா.பேட்டை கடைவீதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற முத்தையாவை(வயது 47) போலீசார் பிடித்து கைது செய்து, லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் தா.பேட்டையை அடுத்த மேட்டுப்பாளையம் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற பவித்திரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (49) என்பவரை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.150-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்