லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

சிவகிரியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-19 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார், சிவகிரி பஸ் நிலையம், மெயின் பஜார், செக்கடி தெரு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 59) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 131 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிவகிரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கடற்கரை (70) என்பவரையும் லாட்டரி சீட்டு விற்றதாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 105 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்