நாமக்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் பூங்கா சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் மாரிகங்காணி தெருவை சேர்ந்த முரளி (வயது33), வௌ்ளவாரித்தெருவை சேர்ந்த கிருபாகரன் (29) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து அசாம் மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.