ஆனைமலை
ஆனைமலை முக்கோணம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆனைமலை போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது ஆனைமலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த அன்வர் அலி(வயது 61) என்பவர் விற்பனை செய்வதற்காக 113 லாட்டரி சீட்டுகள் வைத்து இருந்தார். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் அதே பகுதியில் ஆனைமலையை சேர்ந்த பஷீர்(64) என்பவர் 12 லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார். அதனை ஆனைமலை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.