லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் தனிப்படை போலீசார் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் 3 இலக்க எண் கொண்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட குமரகுருவை (வயது 51) பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம், லாட்டரி எண் எழுதிய நோட்டுகள், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரகுருவை கைது செய்தனர். இதேபோல கணேஷ்நகர் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஜெகநாதனை (62) கைது செய்து ரூ.1,920 மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.