மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், மாயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம், குப்பநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சித்தலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (48), தே.கோபுராபுரம் சிலம்பரசன் (34), ஆகியோர் குப்பநத்தம் பகுதியில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.