கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆமத்தூர்,
விருதுநகர் அருகே உள்ள ஓ. சங்கரலிங்காபுரம் கண்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 24), எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (25). இவர்கள் இருவரும் அங்குள்ள நடுநிலைப்பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து சென்ற ஆமத்தூர் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனத்தில் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ½ கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவுடன் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.