கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-07-05 22:10 GMT

பேரையூர்,

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு படை போலீசார் சேடப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெருங்காமநல்லூர் பகுதியில், உசிலம்பட்டி தாலுகா அயோத்திபட்டியை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் அருண்குமார் (வயது 24), குருக்கம்பட்டியை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்ரீநாத் (25) ஆகியோர் விற்பனை செய்வதற்காக 800 கிராம் கஞ்சா வைத்திருந்த போது, ரோந்து சென்ற போலீசார் அவர்களை பிடித்தனர். அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்