மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
நெல்லை அருகே ஒருவருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே சீவலப்பேரி நொச்சிகுளம் கான்சாபுரத்தை சேர்ந்தவர் மரியசெல்வம். இவருடைய மகன் அருள். இவருக்கும், கீழப்பாட்டத்தை சேர்ந்த பட்டுராஜன் (வயது 26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பட்டுராஜன் தனது நண்பர் பேச்சிமுத்து (24) என்பவருடன் மரியசெல்வம் வீட்டுக்கு சென்று அங்கிருந்த எலக்ட்ரானிக் பொருட்கள், கண்ணாடி ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டுராஜன், பேச்சிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.