தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது

தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-22 19:00 GMT

வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் மேலக்காடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் தீபக் (வயது16). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு ஐ.டி.ஐ. சேர்ந்திருந்தார். சம்பவத்தன்று இவர் 11-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பேசியதை சிலர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த தீபக் வீடு அருகே உள்ள பழுதடைந்த ஓட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தீபக்கின் தந்தை குமார் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கருப்பம்புலத்தை சேர்ந்த கேசவன் (24), திருமறைச்செல்வன் (28) ஆகிய 2 பேர் தீபக்கை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்