தனியார் கம்பெனிக்குள் புகுந்து சரக்கு ஆட்டோ, பணம் திருடிய 2 பேர் கைது

தனியார் கம்பெனிக்குள் புகுந்து சரக்கு ஆட்டோ, பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-05-16 21:42 GMT


மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 29). இவர் சின்ன சொக்கிகுளத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடு போனது. இது குறித்து ராஜன் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து நிறுவனத்திற்குள் புகுந்து திருடிய  2 பேரை கண்டு பிடித்தனர். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட அனுப்பானடியை சேர்ந்த அய்யனார் (19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்