கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-10-27 21:18 GMT

நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் மாரிராஜ் (வயது 29). இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை வண்டிப்பேட்டை இறக்கத்தில் உள்ள அரசு மதுபான கடையில் நண்பரை பார்க்க சென்றார். அப்போது அங்கு வந்த பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த லின்சிராஜ், கிருஷ்ணகுமார் (32), பீட்டர் ரஞ்சித் (32), ரஞ்சித் பிரபாகரன் (30) ஆகியோர் முன்பகை காரணமாக மாரிராஜிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

அப்போது அதை தடுக்க வந்த மாரிராஜின் நண்பரான பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த மாயாண்டி (22) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. உடனடியாக அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் வழக்குப்பதிவு செய்து பீட்டர் ரஞ்சித், ரஞ்சித் பிரபாகரன் ஆகியோரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்