டாக்டரை தாக்கிய 2 பேர் கைது

கலவையில் டாக்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-01 18:36 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசபாளையத்தை சேர்ந்தவர் டாக்டர் விக்னேஷ். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பஜார் வீதியில் கிளினிக் நடத்தி வருகிறார். அதே பஜார்வீதியில் போலி மருத்துவர்கள் கிளினிக் நடத்தி வருவதாக டாக்டர் விக்னேஷ் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஆகியோருக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.

இதை அறிந்த அஜீத் (வயது 27), ரபி (32) ஆகிய இருவரும் சென்று விக்னேசை தகாத வார்த்தைகளால் திட்டு தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த டாக்டர் விக்னேஷ் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து கலவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து அஜித், ரபி ஆகிய இருவரையும் ைகது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்