போலீஸ் ஏட்டை தாக்கிய 2 பேர் கைது

தெங்கம்புதூரில் ஆலய திருவிழாவில் போலீஸ் ஏட்டை தாக்கிய 2 பேர் கைது

Update: 2023-07-31 20:50 GMT

மேலகிருஷ்ணன்புதூர், 

சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் சரவணன்தேரியை சேர்ந்த ரமேஷ் (வயது45) என்பவர் போலீஸ் ஏட்டாக பணிந்து புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தெங்கம்புதூரில் உள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றார். ஆலயத்தில் சப்பர பவனி நடந்த போது தெங்கம்புதூர் டாஸ்மாக் கடையின் எதிரே இருந்த பெட்டிக்கடையில் இருந்து சிலர் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் ஏட்டு ரமேஷ் அவர்களை கண்டித்தார். உடனே, தெங்கம்புதூரை சேர்ந்த விஷ்ணுகுமார் (40), அவரது ஆதரவாளர்கள் பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த சிவநேசன், தீ கொழுத்திராஜா, சக்திவேல் (45), ராஜவேல் (50), சங்கர் (40), விஷ்ணுகுமாரின் மனைவி நந்தினி, வடக்குஅஞ்சுகுடியிருப்பை சேர்ந்த ராஜன் (35) மற்றும் பலர் சேர்ந்து போலீஸ் ஏட்டு ரமேசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த ரமேஷ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார், விஷ்ணுகுமார் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் தீக்கொழுத்தி ராஜா மற்றும் ராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்