தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் 16வயது சிறுவன். இவர் அந்தபகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரை பாரதிதாசன் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கரண் (வயது 20) மற்றும் விளார் தில்லைநகரை சேர்ந்த லோக நாதன் மகன் சந்தோஷ் என்ற சண்டி (20) ஆகிய இருவரும் திடீரென்று தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுவன் செய்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் கரண், சந்தோஷ் என்ற சண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சிறுவனை தாக்கியதற்கான காரணம் குறித்து அவர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.