பிரியாணி கடையில் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

பிரியாணி கடையில் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-24 18:18 GMT

குளித்தலை பஸ் நிலையம் அருகே பிரியாணி விற்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் குளித்தலை அருகே உள்ள கீழகுட்டப்பட்டி சேர்ந்த பாலமுருகன் (வயது 40) என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த கடைக்கு வந்த குளித்தலை பாரதி நகர் பகுதியில் சேர்ந்த மோகன் (30), சஞ்சய் (19), சரவணன் ஆகிய மூன்று பேர் பணம் தராமல் பிரியாணி கேட்டுள்ளனர். பிரியாணிக்கான பணம் தருமாறு பாலமுருகன் அவர்களிடம் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாய்தகராறில் அந்த 3 பேரும் சேர்ந்து பாலமுருகனை திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் மோகன், சஞ்சய், சரவணன் ஆகிய 3 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன், சஞ்சய் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்