காவலாளியை தாக்கிய 2 பேர் கைது

தூத்துக்குடியில் காவலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-09 18:45 GMT

தூத்துக்குடி, ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 70). இவர் போலீசாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அந்த ஓட்டல் முன்பு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளனர். இதனால் இருதயராஜ், ஓரமாக நிறுத்துமாறு கூறி உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து இருதயராஜை தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் வழக்குப்பதிவு செய்து, கால்டுவெல் காலனியை சேர்ந்த பிரதீப்குமார் (20), மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்