மது விற்ற 2 முதியவர்கள் கைது
மது விற்ற 2 முதியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 63), வாணத்திரையான்பட்டிணம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் (67) ஆகியோர் டாஸ்மாக் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 57 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.