மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த வழக்கில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
புஞ்சைபுளியம்பட்டியில் மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த வழக்கில் வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த வழக்கில் வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை அபேஸ்
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி சந்தை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. அவருடைய மனைவி மரகதம் (வயது55). கடந்த 11-ந் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்த போது மர்மநபர்கள் 2 பேர் புகுந்துள்ளனர். பின்னர் அவரிடம் 7½பவுன் தங்க சங்கிலியை பாலிஷ் போட்டு தருவதாக கூறி வாங்கி நைசாக அபேஸ் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசில் மரகதம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நகையை அபேஸ் செய்துவிட்டு சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இதேபோல் கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை சரவணம்பட்டி போலீசார் தேடி வந்தனர். அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த கரன் குமார் (26), கனியா பிரசாத் (40) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் சரவணம்பட்டி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் மூதாட்டியிடம் நகையை பாலிஷ் போடுவதாக கூறி அபேஸ் செய்ததை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மூதாட்டியிடம் அபஸே் செய்த நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.