புதிதாக 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொறுப்பேற்பு

நெல்லையில் புதிதாக 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொறுப்பேற்றனர்.

Update: 2022-07-28 20:53 GMT

நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா ஆகியோர் பணிமாறுதல் பெற்று சென்றதையடுத்து பயிற்சி முடித்த 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் புதிதாக பொறுப்பேற்று உள்ளனர். நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டாக ஆனந்தராஜ், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக யோகேஷ்குமார் ஆகியோர் நேற்று பொறுப்பேற்று கொண்டனர். முன்னதாக அவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்